ரஷ்யாவின் பயங்கர தாக்குதல் குறித்து அதிபர் ஜெலன்ஸ்கி கருத்து!
கெர்ஷன் நகரில் ரஷ்யா படைகள் நடத்திய ஷெல் தாக்குதலில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை உக்ரேனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலன்ஸ்கி(Volodymyr Zelenskyy) பயங்கரவாத தாக்குதல் என வர்ணித்தார்.
இந்த தாக்குதல் குறித்து அரசு வழக்கறிஞர் அலுவலகம் டெலிகிராமில் வெளியிட்டுள்ள பதிவில், ரஷ்யா குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து தாக்குதலை மேற்கொண்டதாகவும், அதில் 8 பொதுமக்கள் பலியாகியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் 58 பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள செலன்ஸ்கி(Volodymyr Zelenskyy) இவை இராணுவ வசதிகள் அல்ல எனவும், வரையறுக்கப்பட்ட விதிகளின் படி இது போர் அல்ல, பயங்கரவாதம் எனவும் குறிப்பிட்டார்.
நாங்கள் தீமைக்கு எதிராக போராடுகிறோம் என்பதை உலகம் புரிந்துக்கொள்ள வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.