ரஷ்யாவில் விண்ணைத் தொட்ட விமான கட்டணம்: காரணம் இதுதான்
ரஷ்யாவில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேறிவரும் நிலையில், விமான கட்டணம் கடுமையாக அதிகரித்து விண்ணைத் தொட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது..
உக்ரைன் தொடர்பான ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் புதிய உத்தரவை அடுத்தே மக்கள் நாட்டைவிட்டு கொத்தாக வெளியேறி வருகின்றனர்.
ரஷ்யாவில் இருந்து துருக்கி, செர்பியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் மக்கள் வெளியேறி வருகின்றனர். உக்ரைனில் பலத்த அடிவாங்கியுள்ள ரஷ்யா, தற்போது பொதுமக்களை போருக்கு அனுப்ப திட்டமிட்டு நடவடிக்கை முன்னெடுத்து வருகிறது.
இந்த நிலையிலேயே ஆயிரக்கணக்கான மக்கள் நாட்டைவிட்டு வெளியேறி வருகின்றனர். பொதுவாக மாஸ்கோவில் இருந்து ஐக்கிய அமீரகத்தின் துபாய் மாகாணத்திற்கு விமான கட்டணம் 181 பவுண்டுகள் என வசூலிக்கப்பட்ட நிலையில், தற்போது 8,000 பவுண்டுகள் என விண்ணைத் தொட்டுள்ளது.
அது மட்டுமின்றி, அண்டை நாடான அர்மேனியாவுக்கு 1,000 பவுண்டுகள் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
வியாழக்கிழமை மட்டும் ரஷ்யாவில் இருந்து பின்லாந்து சென்றவர்கள் எண்ணிக்கை 7,000 என கூறப்படுகிறது. இதில் 6,000 பேர்கள் ரஷ்ய நாட்டவர்கள் என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.