தீப்பற்றி எரியும் உக்ரைன் எண்ணெய் கிடங்கு!
ரஷ்யவுடன் பேச்சுவார்த்தைக்கு வர உக்ரைன் மறுத்துவிட்ட நிலையில், உக்ரைனின் அனைத்து திசைகளிலும் முன்னேறி தாக்கும்படி ரஷ்ய இராணுவத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யப் படைகள் தொடர்ந்து நான்காவது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
உக்ரைனின் ஏராளமான இராணுவ இலக்குகளை ரஷ்யப் படைகள் தாக்கி அழித்துள்ளன. அதேபோல் உக்ரைன் ராணுவமும் தங்களை தற்காத்துக் கொள்ள ரஷ்யப் படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது.
இந்த நிலையில், கிழக்கு உக்ரைன் பகுதியில் உள்ள 2-வது பெரிய நகரமான கார்கீவில் கடும் துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது. ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் எண்ணெய் கிடங்கு ஒன்று தீப்பற்றி எரிந்தது என உக்ரைன் இராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், உக்ரைனுக்குள் நுழையும் ஊடுருவல்காரர்கள் மீது தாக்குதல் நடத்த அந்நாட்டு மக்கள் பாட்டில் குண்டுகளை தயாராக வைத்துள்ளனர்.