ரஷ்யாவின் தாக்குதலுக்கு கனடா கண்டனம்
உக்ரைய்னின் தலைநகர் கியூ உள்ளிட்ட முக்கிய நிலைகள் மீது ரஸ்யா ஏவுகணை தாக்குதல் நடாத்தியமைக்கு கனடா கண்டனம் வெளியிட்டுள்ளது.
கனடாவின் முன்னணி அரசியல் தலைவர்கள் இவ்வாறு கண்டனம் வெளியிட்டுள்ளது.
தலைநகர் கியூ உள்ளிட்ட சில பகுதிகளில் இடம்பெற்ற தாக்குதல்களில் பாரியளவிலான சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தாக்குதல்களில் 11 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 64 பேர் காயமடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
உக்ரைனுக்கான கனேடிய தூதரகத்தில் பணியாற்றி வரும் உள்நாட்டு மற்றும் கனேடிய பிரஜைகள் பாதுகாப்பாக இருக்கின்றார்கள் என அந்நாட்டுக்கான கனேடிய தூதுவர் லாரிசா காலாட்ஸா தெரிவித்துள்ளார்.
சிவிலியன்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதல் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியது எனவும் இது ஓர் போர்க் குற்றச் செயல் எனவும் வெளிவிவகார அமைச்சர் மெலினி ஜோலி தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் உக்ரைன் வெளிவிவகார அமைச்சருடன், கனேடிய வெளிவிவகார அமைச்சர் தொலைபேசியில் கலந்துரையாடி தனது கரிசனையை வெவளியிட்டுள்ளார்.
இந்த மிலேச்சத்தனமான தாக்குதலுக்கு கனடாவின் பல்வேறு அரசியல் தலைவர்களும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.