திடீரென வாபஸ் பெற்ற ரஷ்ய படைகள்!
ரஷ்யாவால் கைப்பற்றப்பட்ட உக்ரைனின் கெய்வ் அருகே உள்ள அன்டோனோவ் விமான நிலையத்தில் இருந்து ரஷ்யப் படைகள் வாபஸ் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கெய்வ் அருகே உள்ள அன்டோனோவ் விமான நிலையத்தில் இருந்து ரஷ்யப் படைகள் வெளியேறியதை செயற்கைக்கோள் படங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
இண்ட்ய்ஹ விமான நிலையம் உக்ரைனின் தலைநகருக்கு வடமேற்கே 18 மைல்கள் (சுமார் 29 கிமீ) தொலைவில் உள்ளது.
மார்ச் 31 அன்று Maxar டெக்னாலஜிஸ் எடுத்த சில புதிய படங்கள் கைவிடப்பட்ட விமானநிலையத்தைக் காட்டுகிறது. ரஷ்யப் படைகள் முன்னர் இராணுவ வாகனங்கள் மற்றும் பீரங்கி நிலைகளைச் சுற்றி பாதுகாப்பு மண் பெர்ம்களைக் கட்டியிருந்தன.
மேலும் குறித்த விமான நிலையத்தில் ரஷ்ய துருப்புக்கள் பல வாரங்கள் செலவழித்தன. இந்த நிலையில் ரஷ்ய படைகள் திடீரென வாபஸ் வாங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
