ரஷ்ய - உக்ரைன் போர் முடிவுக்கு வருமா? டிரம்ப்பை சந்திக்கும் உக்ரைன் ஜனாதிபதி
உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஷெலன்ஸ்கி நாளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை சந்திக்கவுள்ளார்.
யுக்ரேய்ன் மீதான ரஷ்யாவின் முழு அளவிலான போரை முடிவிற்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக, இரு நாட்டு தலைவர்களின் சந்திப்பு நடைபெறவுள்ளது.

சமாதானத்திற்காக அமெரிக்க ஜனாதிபதியினால் உருவாக்கப்பட்ட '20 அம்ச அமைதித் திட்டம்' மற்றும் அமெரிக்காவின் பாதுகாப்பு உத்தரவாதங்கள் தொடர்பான முன்மொழிவுகள் குறித்து இந்த சந்திப்பின் போது விரிவாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த நிலையில் 2026 ஆம் ஆண்டு புத்தாண்டிற்கு முன்பாக பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என தான் நம்புவதாக யுக்ரேய்னின் ஜனாதிபதி தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.
அதேவேளை ரஷ்ய ஜனாதிபதி புடினின் சிரேஷ்ட உதவியாளர், அமெரிக்க அதிகாரிகளுடன் தொலைபேசி வாயிலாக மேலதிக பேச்சு வார்த்தைகளை நடத்தியுள்ளதாக கிரெம்ளின் தெரிவித்துள்ளது.