ரஷியா போரில் தோல்வி அடையும்; கனடா பிரதமர்
உக்ரைனில் தாக்குதலை நடத்தி கடும் சேதங்களை ஏற்படுத்தி வரும் ரஷியா போரில் தோல்வி அடையும் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ(Justin Trudeau) தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மற்றும் ரஷியா இடையேயான போர் தொடர்ந்து 15-வது நாளாக தொடர்ந்து நீடித்து வருகிறது. இதில், இரு நாடுகளை சேர்ந்த பொதுமக்கள், வீரர்கள் என பலர் உயிரிழந்து உள்ளனர். போரை முன்னிட்டு பல்வேறு நாடுகளை சேர்ந்த லட்சக்கணக்கானோர் உக்ரைனில் இருந்து பாதுகாப்பு தேடி வெளியேறி வருகின்றனர்.
ரஷிய படைகள் முக்கிய நகரங்களில் ஏவுகணை, வான் மற்றும் பீரங்கி தாக்குதல்களை நடத்தி வருகிறது. அதே நேரத்தில் ரஷியாவிற்கு உக்ரைனும் ஈடுகொடுத்து வருகிறது.
இந்நிலையில், உக்ரைன் போரில் ரஷியா தோல்வி அடையும் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) தெரிவித்துள்ளார்.