அசர்பைஜான் விமான விபத்துக்கு ரஷ்ய வான்பாதுகாப்பு அமைப்பே காரணம் ; ஒப்புக்கொண்ட புட்டின்
அசர்பைஜான் விமான விபத்துக்கு, ரஷ்யாவின் வான் பாதுகாப்பு அமைப்புகள்தான் காரணம், என ரஷ்ய ஜனாதிபதி விளாதிமீர் புட்டின் முதல்முறையாகப் பொறுப்பேற்றுள்ளார்.
அசர்பைஜான் தலைநகர் பாகுவில் இருந்து, அசர்பைஜான் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் ஒன்று, கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 25 ஆம் திகதி ரஷ்யாவின் க்ரோஸ்னி நகரத்துக்கு 67 பயணிகளுடன் புறப்பட்டது.
அப்போது, திடீரென அந்த விமானம், கஸகஸ்தானில் அவசரமாக தரையிறக்கப்பட்டபோது, விபத்துக்குள்ளானதில் 38 பயணிகள் உயிரிழந்தனர்.
இதனைத் தொடர்ந்து, ரஷ்யாவின் தாக்குதலில் விமானம் சேதமடைந்ததால், அவசரமாக தரையிறக்க முயன்றதில், விபத்து ஏற்பட்டதாக அசர்பைஜான் அதிகாரிகள் குற்றம்சாட்டினர்.
இந்த நிலையில், தஜிகிஸ்தான் நாட்டில் நடைபெறும் முன்னாள் சோவியத் நாடுகளின் மாநாட்டில், அசர்பைஜான் ஜனாதிபதி இல்ஹாம் அலீவ் உடனான சந்திப்பில், விமான விபத்துக்கு ரஷ்யாவின் வான் பாதுகாப்பு அமைப்புகள்தான் காரணம் என ரஷ்ய ஜனாதிபதி புட்டின் முதல்முறையாகப் பொறுப்பேற்றுள்ளார்.