தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்தின் மீது ரஷ்ய ட்ரோன் தாக்குதல்
உக்ரேனில் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்தின் மீது ரஷ்ய ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் குறைந்தது ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தத் தாக்குதல் தெற்கு மத்திய நகரமான மர்ஹானெட்ஸில் புதன்கிழமை (23) காலை நடத்தப்பட்டுள்ளதாக உக்ரேனிய அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.
த தாக்குதலில் சுமார் 30 பேர் காயமடைந்துள்ளதாகவும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் பிராந்தியத்தின் தலைவர் செர்ஹி லைசாக் உறுதிபடுத்தியுள்ளார்.
அதேவேளை உக்ரைன் - ரஷ்ய போர் நிறுத்தத்தை உறுதி செய்யும் நோக்கில் இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா மற்றும் உக்ரேன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இராஜதந்திரிகள் லண்டனில் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராகி வரும் நிலையில் இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.