உக்ரைனில் ரயில் மீது ரஷியா ட்ரோன் தாக்குதல் ; 30க்கும் மேற்பட்டோர் காயம்
உக்ரைனில் ரயில் மீது ரஷியா நடத்திய ட்ரோன் தாக்குதலில் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
உக்ரைனின் வடக்கு சுமி பகுதியில் உள்ள ரயில் நிலையத்தில் பயணிகள் ரயில் மீது ரஷியா ட்ரோன் தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலில் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர்.
இதுகுறித்து உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி டெலிகிராம் பதிவில், சுமி பகுதியின் ஷோஸ்ட்காவில் உள்ள ரயில் நிலையத்தில் ஒரு மிருகத்தனமான ரஷியா ட்ரோன் தாக்குதல்.
இதில் பயணிகள் மற்றும் ரயில் ஊழியர்கள் காயமடைந்தனர். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தாக்குதலில் பாதிப்பிற்குள்ளான ரயிலின் விடியோவையும் அவர் வெளியிட்டார்.
ஷோஸ்ட்காவிலிருந்து தலைநகர் கீவ்வுக்குச் செல்லும் ரயிலில் தாக்குதல் நடந்ததாக ஆளுநர் ஓலே ஹ்ரிஹோரோவ் தெரிவித்தார்.
மருத்துவர்கள் மற்றும் மீட்புப் பணியாளர்கள் சம்பவ இடத்தில் உள்ளதாக அவர் மேலும் கூறினார்.