பயணிகள் ரயில் மீது ரஷ்யாவின் டிரோன்கள் திடீர் தாக்குதல்; ஐவர் பலி
உக்ரைனில் கார்கீவ் நகரில் சென்று கொண்டிருந்த பயணிகள் ரயில் மீது ரஷ்யாவின் டிரோன்கள் திடீர் தாக்குதல் நடத்தியதில் ஐவர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
நேற்றிரவு நடந்த இந்த தாக்குதலில் ஐவர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்களை மீட்கும் பணி நடந்து வருகின்றது.

உக்ரைனின், ஒடிசா நகரில் கருங்கடல் துறைமுக நகரில் நேற்று முன்தினம் மற்றொரு தாக்குதலை ரஷ்யா நடத்தியது. இதில், 50-க்கும் மேற்பட்ட டிரோன்கள் ஈடுபடுத்தப்பட்டன.
இதுபற்றி அதிகாரிகள் கூறும்போது, இந்த சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என தெரிவித்தனர். இதில், 5 அடுக்குமாடி கட்டிடங்களும் சேதமடைந்தன.
குளிர்காலம் மக்களை வாட்டி வரும் சூழலில், மின்சார வசதி மற்றும் வெப்பம் ஏற்படுத்தி கொள்ளும் வசதியை தாக்கி அழிக்கும் முயற்சியாக, மின்சார சட்டகங்களை இலக்காக கொண்டு, ரஷ்யா இந்த டிரோன் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றமை உக்ரைன் மக்களை இக்கட்டில் தள்ளியுள்ளது.