குறி வைக்கப்படும் ரஷ்ய தூதரகங்கள்!
ருமேனியா தலைநகர் Bucharest ரஷ்ய தூதரகத்தின் மீது சாரதி ஒருவர் தனது காரை மோதி உயிரிழந்துள்ளதாக ருமேனிய தலைநகர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இந்த சம்பவம் , இது விபத்தா அல்லது அல்லது வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட ஒன்றா என்பது தெளிவாகத் தெரியவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது .
உக்ரைன் படையெடுப்பால் ஆத்திரமடைந்துள்ள எதிர்ப்பாளர்களால் அண்மைய வாரங்களில், ஐரோப்பாவில் உள்ள பல ரஷ்ய தூதரகங்கள் குறிவைக்கப்பட்டன.
இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும், சாரதியின் அடையாளத்தை வெளியிடவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதேசமயம் சர்வதேச விதிகளின்படி செயல்படாத 10 ரஷ்ய இராஜதந்திரிகளை வெளியேற்றுவதாக ருமேனியா செவ்வாயன்று அறிவித்திருந்த நிலையில், இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பிப்ரவரி 24ம் திகதி ரஷ்யா தங்கள் நாட்டை ஆக்கிரமித்ததில் இருந்து சுமார் 624,860 உக்ரேனியர்கள் ருமேனியாவிற்கு தப்பி ஓடிவிட்ட நிலையில் சுமார் 80,000 பேர் இன்னும் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.