யுக்ரேன் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்
ரஷ்யா யுக்ரேன் மீது நடத்திய ஏவுகணை தாக்குதலில் பலர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
தாக்குதலுக்காக 267 ஏவுகணைகள் ஏவப்பட்டதாகவும் அதில் 138 ஏவுகணைகள் யுக்ரேன் விமானப் படையினரால் இடைமறிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த தாக்குதலினால் யுக்ரேனில் பல பகுதிகளில் பாரிய அளவிலான தீ விபத்துக்கள் மற்றும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
உயிரிழந்தவர்களில் மூவர் அடையாளங்காணப்பட்டுள்ள நிலையில் ஏனையவர்களைத் தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
கார்கிவ்,கிவ் உள்ளிட்ட சுமார் 13 இடங்களில் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக யுக்ரேன் நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
3 பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஊடாகவும் தாக்குதல் நடத்தப்பட்டதாக யுக்ரேன் விமானப்படை தெரிவித்துள்ளது.
ஐரோப்பா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் பலமும் தேவை எனத் தாக்குதலின் பின்னர் யுக்ரேன் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.