உக்ரைனின் தாக்குதலால் கடும் கோபத்தில் ரஷ்ய மக்கள்!
உக்ரைனின் தாக்குதல் தொடர்பில் நாட்டின் இராணுவம் மீது ரஷ்ய மக்கள் கடும் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புத்தாண்டுக்கு முந்தைய நாளில் உக்ரைன் நடத்திய தாக்குதலில் ரஷ்யத் துருப்புகள் கொல்லப்பட்டனர். அவர்களுக்கான இரங்கல் கூட்டத்தின்போது ரஷ்ய ராணுவம் குறித்த அதிருப்தியை மக்கள் முன்வைத்தனர்.
ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள டொனேட்ஸ்க் (Donetsk) வட்டாரத்தில், தற்காலிக ராணுவக் குடியிருப்பு மீது உக்ரேன் தாக்குதல் நடத்தியது.
உக்ரைன் - ரஷ்யப் போரில் ஆக அதிகமான உயிருடற்சேதம் ஏற்பட்ட சம்பவங்களில் அதுவும் ஒன்று. அதில் 63 வீரர்கள் கொல்லப்பட்டதாக ரஷ்யத் தற்காப்பு அமைச்சு தெரிவித்தது.
இந்நிலையில் ஆபத்தான சூழலில் கவனக்குறைவாக இருந்த தளபதிகளுக்குத் தண்டனை விதிக்கப்படவேண்டும் என்று ரஷ்யத் தேசியவாதிகளும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் வலியுறுத்தினர்.
உக்ரைனின் எறிபடைகள் தாக்கக்கூடிய பகுதி என்று தெரிந்தும் ஆயுதக் கிடங்குக்கு அருகில் வீரர்கள் தங்கவைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மேலும் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த பல்வேறு ரஷ்ய நகரங்களில் பேரணிகள் நடைபெறுகின்றன.