அமெரிக்காவின் முக்கிய தலைவர்கள் மீது ரஷ்யா அதிபர் தடை
அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளுக்கு பதிலடி தரும் வகையில், அதிபர் ஜோ பைடன்(Joe Biden) உள்ளிட்ட முக்கிய அமெரிக்கர்கள் ரஷ்யாவுக்குள் நுழைய அதிபர் விளாடிமிர் புடின் (Vladimir Putin)தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த மாதம் 24-ம் தேதி தாக்குதலை ஆரம்பித்தது. இன்றுடன் 3 வாரங்களை கடந்து தாக்குதல் தொடர்ந்து வருகிறது.
சிறிய அளவில் ராணுவத்தை வைத்துள்ள உக்ரைன் தனது சக்திக்கு தகுந்தவாறு எதிர் தாக்குதலை நடத்தி வருகிறது. ரஷ்யாவுக்கு எதிராக உலக நாடுகள் பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன.
அது எந்த விதத்திலும், உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்துவதை நிறுத்தவில்லை. ரஷ்யாவில் தயாரிக்கப்படும் கடல் உணவுகள், வோட்கா, வைரம் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களுக்கான இறக்குமதிக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.
இந்நிலையில், “ அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளுக்கு பதிலடி தரும் வகையில், அதிபர் ஜோ பைடன் (Joe Biden) உள்ளிட்ட முக்கிய அமெரிக்கர்கள் ரஷ்யாவுக்குள் நுழைய அதிபர் விளாடிமிர் புடின் (Vladimir Putin)தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக ரஷ்யா வெளியிட்டுள்ள அறிவிப்பில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன்(Joe Biden), வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன்(Anthony Blingen), கனடா அதிபர் ஜஸ்டின் ட்ரூடோ(Justin Trudeau), அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலாளர் லாயட் ஆஸ்டின்(Lloyd Austin) மற்றும் ஹிலாரி கிளிண்டன்(Hillary Clinton) உள்ளிட்ட 13 பேர் ரஷ்யாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் ரஷ்யாவின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் ஒரு டிரில்லியன் டாலர்களுக்கு புதிய திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் ரஷ்யாவுக்கு எதிராக மேற்கத்திய நாடுகளை அணி திரட்டும் முயற்சியாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன்(Joe Biden) அடுத்தவாரம் நேட்டோ மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பின் தலைவர்களை பெல்ஜியத்தில் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.