ரஷ்ய அதிபர் புடினை நெருங்கும் ஆபத்து!
ரஷ்ய அதிபர் புடினுக்கு (Vladimir Putin) நெருக்கமானவர்களும், ஆதரவாளர்களும், உக்ரைன் தரப்பிலிருந்து புடினுக்கு ஆதரவு தெரிவிப்பவர்களும் தொடர்ந்து கொல்லப்பட்டு வருகிரார்கள்.
அதோடு சிலர் தாக்குதலில் தப்பியிருக்கிறார்கள், சிலர் விஷம் வைக்கப்பட்டு, கொலை முயற்சியில் தப்பியிருக்கிறார்கள். இந்நிலையில், அடுத்த குறி புடினுக்குத்தான் (Vladimir Putin) என முன்னாள் நேட்டோ தலைவரான Gary Tabach எச்சரித்துள்ளார்.
அடுத்தடுத்து இடம்பெற்ற உயிரிழப்புக்கள்
அண்மையில் புடினுக்கு (Vladimir Putin) நெருக்கமானவரான Alexander Dugin என்பவரின் மகளான Darya Dugina என்ற இளம்பெண், கார் வெடிகுண்டு மூலம் கொல்லப்பட்டார். அதோடு புடின் ஆதரவாளரான ஒருவர் தனது மகளைப் பள்ளியிலிருந்து அழைத்துவரச் செல்லும்போது கார் வெடிகுண்டு மூலம் கொல்லப்பட்டுள்ளார்.
கெர்சன் பகுதியில் புடின் (Vladimir Putin) ஆதரவாளரான Vitaly Gura என்பவர் அவரது அலுவலகத்தில் வைத்தே சுட்டுக்கொல்லப்பட்டதுடன், Dmitry Savluchenko என்னும் அலுவலர் ஒருவர் வெடிகுண்டு மூலம் கொல்லப்பட்டுள்ளார்.
உக்ரைன் தரப்பில் பணியாற்றி பின் ரஷ்ய தரப்பில் இணைந்த Askyar Laishev என்பவரும் கார் வெடிகுண்டு மூலம் கொல்லப்படதுடன், ரஷ்ய ஆதரவாளரான Valery Kuleshov என்பவர் கொல்லப்பட்டுள்ளார்.
புட்டினின் தலைக்கும் விலை
அத்துடன் புடினுடைய படைகளை உக்ரைனுக்கு வரவேற்ற மேயரான Vlodymyr Struk என்பவர் கடத்தப்பட்டு மார்பில் சுடப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளார். ஒரு பக்கம், உக்ரைன் படையெடுப்பை சொதப்பியதால் புடினுக்கு (Vladimir Putin) நெருக்கமானவர்களே அவரது தலைக்கு விலை வைத்திருக்கிறார்களாம்.
மறுபக்கம், உக்ரைன் தரப்பில் புடினைக் கொல்ல முயன்று வருகிறது ஒரு கூட்டம். ஆக, இரண்டு பக்கமிருந்தும் புடினுக்கு ஆபத்து நெருங்குகிறது. இதற்கிடையில், புடினுக்கு (Vladimir Putin) நெருக்கமானவர்களைக் கொல்ல ஸ்லீப்பர் செல்கள் தயாராக உள்ளனராம்.
அவர்களில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாம். இந்த ஸ்லீப்பர் செல்களுக்கு தங்கள் சக உறுப்பினர்களைத் தெரியாது. ஆகவே, ரஷ்ய அதிகாரிகளிடம் அவர்களில் யாராவது சிக்கினால் கூட, அவர்களை சித்திரவதை செய்தால் கூட, அவர்களிடமிருந்து ரஷ்யர்களால் எந்த தகவலையும் பெற முடியாதாம்.
புடினுடைய கூட்டாளிகள்
மேலும் ரஷ்யா குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளும் நிபுணரான Michael Kofman, புடினுடைய கூட்டாளிகள் ஒன்றில் கொல்லப்படப்போகிறார்கள், அல்லது கொல்லப்படுவோம் என்ற பயத்திலேயே இருக்கப்போகிறார்கள் என கூறியுள்ளாராம்.
அதேவேளை உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பு போர் இன்னும் முடிவுக்கு வராத நிலையில் ஆக்கிரமிப்பு ஆரம்பமானது முதல் உலகளவில் புடின் (Vladimir Putin) கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.