ரஷ்ய சொத்துக்களை பறிமுதல் செய்து ஏலத்தில் விட வேண்டும்!
உக்ரைன் - ரஷ்யா ஆகிய இரு நாடுகளுக்கிடையே 72 வது நாளாக போர் நடந்து வருகிறது.
ரஷ்யா உக்ரைன் மீது பல்வேறு தாக்குதல்களை தொடுத்ததில் பல்லாயிரக் கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷ்யாவுக்கு சொந்தமான சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும் என ஐரோப்பிய யூனியன் வலியுறுத்தியது.
இதுதொடர்பாக பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில், ஐரோப்பிய யூனியன் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் (Ursula von der Leyen) கூறுகையில்,
ஐரோப்பிய யூனியன் தங்கள் நாடுகளில் உள்ள ரஷ்ய சொத்துக்களை பறிமுதல் செய்து அவற்றை ஏலத்தில் விட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இதனால் திரட்டப்படும் நிதியை பாதிக்கப்பட்ட உக்ரைன் பகுதிகளுக்கு அனுப்ப வேண்டும். மரியுபோல், லவீவ், கீவ் உள்ளிட்ட நகரங்களை மறுசீரமைக்க இந்த நிதி உதவும் என கூறியுள்ளார்.