ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைனின் அதிபரின் அதிரடி நடவடிக்கை!
ரஷ்ய கூட்டமைப்புக்கு சொந்தமான சொத்துக்களை உக்ரைன் அரசு பறிமுதல் செய்யும் சட்டத்தை அந்நாட்டு நாடாளுமன்றம் மார்ச் 3ஆம் திகதி அன்று நிறைவேற்றியது.
உக்ரைன் மீது ரஷ்யா 15 நாட்களாக தாக்குதலை தொடுத்து வருகின்றது. இந்தப் போரில் இரு நாடுகளைச் சேர்ந்த பொதுமக்கள், வீரர்கள் என பலர் கொல்லப்பட்டுள்ளனர். பல்வேறு நாடுகளை சேர்ந்த லட்சக்கணக்கானோர் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர்.
ரஷ்ய துருப்புகள் முக்கிய நகரங்களில் ஏவுகணை, வான் மற்றும் பீரங்கி தாக்குதல்களை நடத்தி வருகிறது. அதே நேரத்தில் உக்ரைனும் ரஷ்யப் படைகளின் தாக்குதலுக்கு ஈடுகொடுத்து வருகிறது.
ரஷ்யாவின் படையெடுப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ள உலக நாடுகள் பலவும் அதன்மீது பொருளாதார தடையை விதித்துள்ளன.
இந்த நிலையில், உக்ரைனில் உள்ள ரஷ்ய சொத்துக்களைக் கைப்பற்றும் சட்டத்தில் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) கையெழுத்திட்டு உள்ளார் என அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.