பிரான்சில் ஈவிரக்கமற்ற செயல் ; 22 மாதகுழந்தைக்கு நேர்ந்த துயரம்
பிரான்சில் நேற்றையதினம் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் 22 மாதகுழந்தையொன்றும் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அனேசியில் இடம்பெற்ற தாக்குதல்கள் குறித்து பிரான்ஸ் பிரதமர் எலிசபெத் போர்னே தகவல்களை வெளியிட்டுள்ளார்.
நான்கு சிறுவர்கள் உட்பட ஆறுபேர் காயமடைந்துள்ளனர் 22 மாதகுழந்தையொன்றுயும் காயமடைந்துள்ளது என பிரதமர் தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
சுவீடன்அகதி கைது
காயமடைந்த சிலர் தீவிரகிசிச்சை பிரிவில் ஆபத்தான நிலையில் உள்ளனர் .சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் சிரியாவை சேர்ந்தவர் சுவீடனில் அகதி அந்தஸ்த்தை பெற்றுக்கொண்டவர்.
அதேசமயம் அவர் மனோநிலை பாதிக்கப்படாதவர் குற்ற பின்னணியை கொண்டவர் இல்லை எனவும் இது பயங்கரவாத தாக்குதல் என்பதற்கான ஆதாரங்கள் எதுவுமில்லை என பிரான்ஸ் பிரதமர் தெரிவித்துள்ளார்.
பிரென்ஞ் அல்ப்ஸில் உள்ள அனெசை என்றபகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் , பூங்காவில் விளையாடிக்கொண்டிருந்த மூன்றுவயதிற்கு உட்பட்ட சிறுவர்களை இலக்குவைத்து இந்த கத்திக்குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
பாதுகாப்பு படையினரின் துரித நடவடிக்கை காரணமாக குற்றவாளி கைதுசெய்யப்பட்டுள்ளார் என உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.