திடீரென ரிஷியை கைவிட்டு கட்சிமாறிய சாஜித் !
பிரித்தானிய அரசியலில் இன்று நிலவும் குழப்பத்தின் பின்னணியில் இருப்பதாக கூறப்படுபவர்கள் இருவர். அவர்களில் ஒருவர் முன்னாள் நிதி அமைச்சரான ரிஷி சுனக் (Rishi Sunak), மற்றொருவர் முன்னாள் சுகாதாரச் செயலரான சாஜித் ஜாவித் (Sajid Javid)ஆவார்கள்.
இவர்கள் இருவரும் தத்தம் பதவிகளை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்தே, அமைச்சர்கள் பலர் ராஜினாமா செய்ய, போரிஸ் ஜான்சன் (Boris Johnson) தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்யவேண்டிய நிலை உருவாயிற்று.
ஆனால், போரிஸ் ஜான்சனின் (Boris Johnson) அமைச்சரவையிலிருந்து முதலில் ராஜினாமா செய்தவர் சாஜித் (Sajid Javid) தான், அதற்குப் பிறகுதான் ரிஷி (Rishi Sunak) ராஜினாமா செய்தார்.
எனினும் போரிஸ் ஜான்சனின் (Boris Johnson) ஆட்சி கவிழ்வதற்கு ரிஷிதான் (Rishi Sunak) காரணம், அவர்தான் போரிஸ் ஜான்சனை முதுகில் குத்திவிட்டார் என்றே பேசப்படுகிறது. இப்படிப்பட்ட சூழலில், சாஜித் (Sajid Javid) மீண்டும் ஒரு சந்தர்ப்பவாத செயலைச் செய்துள்ளார்.
அதாவது , திடீரென ரிஷியை (Rishi Sunak) எதிர்த்து போட்டியிடும் லிஸ் ட்ரஸ்ஸுக்கு (Liz Truss) ஆதரவளிப்பதாக சாஜித் (Sajid Javid) தெரிவித்துள்ளார் .
புலம்பெயர்தல் பின்னணி கொண்ட சாஜித்தும் (Sajid Javid) ரிஷியும் நண்பர்கள் என்பதை பலரும் அறிவார்கள். அப்படியிருக்கும் நிலையில், திடீரென தன் நண்பரைக் கைவிட்டு எதிரணியில் சாஜித் சேர்ந்துள்ளார்.
அத்துடன் தனது நண்பரான ரிஷியின் (Rishi Sunak) பொருளாதாரக் கொள்கைகளைத் தாக்கிப் பேசியதோடு மட்டுமல்லாது, அவரை விட்டு எதிரணியில் போய்ச் சேர்ந்துள்ளார் சாஜித் (Sajid Javid).
ஏற்கனவே பிரித்தானிய பாதுகாப்புச் செயலரான பென் வாலேஸ் லிஸ் ட்ரஸ்ஸுக்கு (Liz Truss) தனது ஆதரவைத் தெரிவித்ததே ரிஷிக்கு (Rishi Sunak) பெரிய அடியாக கருதப்படும் நிலையில், தற்போது அவரது நெருங்கிய நண்பரான சாஜித் ஜாவிதும் (Sajid Javid) லிஸ் ட்ரஸ்ஸுக்கு (Liz Truss) தனது ஆதரவைத் தெரிவித்துள்ளமை ரிஷிக்கு (Rishi Sunak) மிகப்பெரிய அடியாக கருதப்படுகிறது.