நாடாளுமன்ற கூட்டத்தில் சஜித்தின் கருத்து
இன்றைய நாடாளுமன்ற கூட்டத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
சஜித்தின் கருத்து
"நாட்டின் 56 வருட சாபம் சும்மா விடாது.அதை இன்றிலிருந்து இல்லாமல் செய்வோம்.சிங்களம் சிங்களம் என்று சொல்லி ஒன்றையும் காணவில்லை.சிங்களத்தை வைத்து தேசியம் பேசி எந்தப் பலனும் இல்லை.
ஆகவே அரசு கரும மொழிகளாக தமிழ் சிங்களம் இருக்கட்டும்.எங்கே சென்றாலும் தற்போது ஆங்கிலம் தேவைப்படுகிறது.ஆகவே பாலர் பாடசாலையிலிருந்து ஆங்கில கல்வியை வளர்க்க ஒரு பொறிமுறையை உருவாக்குங்கள்.
மேலும் சிறந்த விஞ்ஞானிகளின் பட்டியலில் எமது சன்ன ஜனசுமணவின் பெயரும் உள்வாங்கப்பட்டுள்ளதாக அறிகின்றோம்.அவருக்கும் எமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்" என்று உரை ஆற்றி உள்ளார்.