ஓப்பன் ஏ.ஐ நிறுவனத்தின் சிஇஓ ஆக நியமனம் பெற்றுள்ள சாம் ஆல்ட்மேன்
மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் ஏ.ஐ பிரிவு தலைவராக பொறுப்பேற்ற ஏ.ஐ பிரிவு தலைவராக பொறுப்பேற்ற இரண்டே நாட்களில் சாம் ஆல்ட்மேன் ஓப்பன் ஏ.ஐ நிறுவனத்தின் சிஇஓ ஆக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதே ஓப்பன் ஏ.ஐ நிறுவனத்தின் இயக்குநர் குழுவுக்கு அளிக்கும் தகவல்கள் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் இல்லை என்று கூறி சில தினங்களுக்கு முன் சி.இ.ஓ பதவியிலிருந்து சாம் ஆல்ட்மேன் நீக்கப்பட்டிருந்தார்.
இதைத்தொடர்ந்து தங்கள் நிறுவனத்திற்கு செயற்கை நுண்ணறிவு பிரிவின் தலைவராக சாம் ஆல்ட்மேன் நியமிக்கப்படுவதாக மைக்ரோசாப்ட் நிறுவன சி.இ.ஓ சத்யா நாதெள்ளா அறிவித்துள்ளார்.
மறுபுறம் சாம் ஆல்ட்மேன் நீக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஓப்பன் ஏ.ஐ நிறுவனத்தின் 70 சதவீத ஊழியர்கள் இராஜினாமா செய்யப்போவதாக தெரிவித்தனர்.
இதையடுத்து ஓப்பன் ஏ.ஐ நிறுவனத்தின் இயக்குநர் குழு மாற்றி அமைக்கப்பட்டது.
அவர்கள் சாம் ஆல்ட்மேனை மீண்டும் நிறுவன சி.இ.ஓ . சத்யா நாதெள்ளா சாம் ஆல்ட்மேன் மற்றும் ஓப்பன் ஏ.ஐ நிறுவனத்துடன் இணைந்து செயற்பட விருப்பம் தெரிவித்துள்ளார்.