கனடாவின் இந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு
கனடாவின் சஸ்கற்றுவானில் பனிப்புயல் காரணமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக அதிவேக நெடுஞ்சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
திங்கட்கிழமை காலை வரையில் பனிப்புயல் நிலைமைகள் நீடிக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
கனடிய சுற்றாடல் முகவம் இந்த காலநிலை குறித்த எதிர்வுகூறல்களை வெளியிட்டுள்ளது.
கடுமையான பனிப்பொழிவு ஏற்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சாலைகள் வழுக்கும் தன்மையுடையவை எனவும் பனிமூட்டம் அதிகமாக காணப்படும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.
பனிப்புயல் காரணமாக விமானப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சீரற்ற காலநிலை நிலவும் காலப் பகுதியில் முடிந்தளவு வாகனப் போக்குவரத்தினை தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.