சஸ்கட்ச்வான் கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் கைதின் பின்னர் மரணம்
சஸ்கட்ச்வானில் இடம்பெற்ற படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டு சில மணி நேரத்தில் உயிரிழந்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை சஸ்கட்ச்வானின் சிறிய கிரமங்களான ஜேம்ஸ் க்ரீ மற்றும் வெல்டொன் ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டதுடன் 18 பேர் காயமடைந்துள்ளனர்.
டேமியன் சன்டர்சன் மற்றும் மயில்ஸ் சன்டர்சன் ஆகியோர் இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என அறிவிக்கப்பட்டது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குறித்த சகோதரர்களில் ஓருவரான டேமியன் சடலமாக மீட்கப்பட்டார்.
பின்னர் நான்கு நாட்களாக தேடப்பட்டு வந்த நிலையில் மயில்ஸ் சன்டர்சனை பொலிஸார் மடக்கிப் பிடித்தனர்.
எவ்வாறெனினும் நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் மயில்ஸ் சன்டர்சன் உயிரிழந்து விட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட சிறிது நேரத்தில் மயில்ஸ் நோய் வாய்ப்பட்டதாகவும் பொலிஸார் உயிர்ப்பு காப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அம்பியூலன்ஸ் மூலம் சஸ்கடூன் வைத்தியசாலைக்கு மயில்ஸ் அழைத்துசு; செல்லப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
மயில்ஸ் என்ன காரணத்தினால் உயிரிழந்தார் என்பது பற்றிய விபரங்களை வெளியிட முடியாது எனவும் உடற்கூற்று பரிசோதனையின் பின்னரே தகவல்களை வெளியிட முடியும் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மயில்ஸ் சன்டர்சனை கைது செய்ய முயற்சித்த போது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடாத்தியிருந்தனர் என தெரிவிக்கப்படுகின்றது.
சஸ்கட்ச்வானின் கிராமிய பகுதி வீதியொன்றிற்கு அருகாமையில் குறித்த நபரை பொலிஸார் மடக்கிப் பிடித்துள்ளனர்.