கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் ; ட்ரோன்களையும் ஏவுகணையையும் தடுத்த சவுதிஅரேபியா
சவுதிஅரேபியாவின் கிழக்கு பிராந்தியத்தில் ஊடுருவ முயன்ற மேலும் 9 ஆளில்லா வானூர்திகள் (Drones) அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் இடைமறித்து அழித்துள்ளது.
கடந்த சில மணிநேரங்களாக சவுதி அரேபியாவை இலக்கு வைத்து ஏவப்பட்ட ஆளில்லா வானூர்திகள் மற்றும் ஒரு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஆகியவற்றை அந்நாட்டு (Ballistic Missile) இராணுவம் முறியடித்து வருவதாக அல் ஜசீரா செய்தி வெளியிட்டள்ளது.

இந்த 9 ஆளில்லா வானூர்திகளும் நாட்டின் கிழக்கு பகுதியில் வைத்து சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன.
இந்த ஆளில்லா வானூர்திகள் எங்கிருந்து ஏவப்பட்டன என்பது குறித்தோ, அல்லது இதனால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் சொத்து சேதங்கள் குறித்தோ பாதுகாப்பு அமைச்சகம் இன்னும் விரிவான தகவல்களை வெளியிடவில்லை.
இப்பகுதியில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், சவுதி அரேபியாவின் வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் நுழையும் அச்சுறுத்தல்களைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.