அவுஸ்திரேலியாவை உலுக்கிய சகோதரிகளின் மர்ம மரணத்தில் முக்கிய திருப்பம்
சவுதி அரேபிய சகோதரிகள் இருவர் அவுஸ்திரேலியாவின் சிட்னியில் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் தற்போது துப்புத்துலங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
சவுதி அரேபியாவை சேர்ந்த அஸ்ரா (24) மற்றும் அமால் (23) சகோதரிகள் இருவரும் சிட்னியில் தாங்கள் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் இறந்து ஒரு மாதத்திற்கு பின்னர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டனர்.
ஜூன் 7ல் இறந்த அவர்களின் மரணத்துக்கு காரணம் தெரியாமல் சிட்னி பொலிசார் திணறி வந்தனர். மட்டுமின்றி, குறித்த சகோதரிகளின் புகைப்படங்களை ஊடகங்களிடம் பகிர்ந்து அவர்கள் தொடர்பில் தகவல்களைக் கண்டறிய முயற்சித்தனர்.
இந்த நிலையில் அவர்களின் மரணத்தில் துப்புக்கிடைத்துள்ளதாக சிட்னி பொலிசார் தற்போது தகவல் வெளியிட்டுள்ளனர். இதில், தன்பால் ஈர்ப்பாளர்களுக்கான விழா ஒன்றில் குறித்த சகோதரிகள் இருவரையும் கடந்த ஜனவரி மாதம் கலந்துகொண்டதாக பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.
தனியாக, தயக்கத்துடன் காணப்பட்ட அந்த இருவரிடமும் தாம் பேச்சுக்கொடுத்ததாகவும், சவுதி அரேபியாவில் தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று தன்னிடம் கூறியதாகவும் அவர் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.
மட்டுமின்றி, அந்தச் சகோதரிகளில் ஒருவர் தன்பாலின ஈர்ப்பாளர் என்பதை தன்னால் புரிந்துகொள்ள முடிந்தது எனவும் அவர் விசாரணை அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.
இதனையடுத்து, தங்கள் பாலினம் குறித்த அச்சத்தில் தற்கொலை செய்து கொண்டனரா என்ற கோணத்திலும் தற்போது சிட்னி பொலிசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.