ஸ்கார்பரோவில் சிறுவர் பாரமரிப்பு நிலையத்தில் பாரிய தீ விபத்து!
ரொறன்ரோ மாகாணம் ஸ்கார்பரோவில் சிறுவர் பாரமரிப்பு நிலையத்தில் தீ விபத்துச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
மேலும், இந்த தீ விபத்து சம்பவத்தில் பிள்ளைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
scarborough Kings மற்றும் Morningside வீதிகளுக்கு அருகாமையில் இந்த சிறுவர் பராமரிப்பு நிலையம் அமைந்துள்ளது.
தீவிபத்து ஏற்பட்ட நேரத்தில் பராமரிப்பு நிலையத்திலிருந்த பிள்ளைகள் வேறும் ஓர் கட்டடத்தில் இருந்தனர் எனவும் இதனால் அவர்கள் உயிர் தப்பியதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த தீ விபத்தினால் சிறுவர் பராமரிப்பு நிலையம் பாரியளவில் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வெடிப்புச் சம்பவமொன்றே இடம்பெற்றுள்ளதாகவும் இது குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.