டொரோண்டோவில் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை தேடும் பொலிஸார்
கனடாவின் ஸ்கார்ப்ரோ பகுதியில் பெண் ஒருவருக்கு கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டின் பேரில் நபர் ஒருவரைத் தேடி வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஸ்கார்பரோ பகுதியைச் சேர்ந்த ஜெரெமையா ரஷீத் பூரன் (வயது 30) என்பவர், அவர் அறிந்த ஒரு பெண்ணை தொடர்ந்து தொந்தரவு செய்து, கொலை அச்சுறுத்தல்கள் விடுத்ததாக நயாகரா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவங்கள் மார்ச்சுக்கும் ஏப்ரலுக்கும் இடையில் நடந்ததாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால், நயாகரா பிரதேசத்தின் எந்த பகுதியில் என்று தெளிவாக குறிப்பிடவில்லை.
பூரனுக்கு தற்போது பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், பூரன் கடந்த 2024 ஆம் ஆண்டிலும் நயாகரா பொலிஸாரினால் விசாரணைக்குள்ளானார் எனவும் இதேவிதமான குற்றச் செயல் குறித்து முறைப்பாடு செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவர் தற்போது தலைமறைவாக உள்ளார்” என பொலிஸார் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.