பாடசாலையில் பரபரப்பு; மாணவனின் துப்பாக்கிச்சூட்டில் இருவர் பலி ஐவர் படுகாயம்
தென்கிழக்கு ஐரோப்பிய நாடான சேர்பிய தலைநகரில் பாடசாலையொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிபிரயோகத்தில் இருவர் பலியாதுடன் 5 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.
சம்பவத்தில் ஆசிரியர் ஒருவரும் பாடசாலை பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளதுடன் ஐந்துமாணவர்கள் படுகாயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள்தெரிவித்துள்ளன.
தந்தையின் துப்பாக்கி
12 அல்லது 13 வயது மாணவன் ஒருவனே இந்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ள நிலையில் சிறுவன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
துப்பாக்கிசூட்டு சம்பவம் இடம்பெற்ற பகுதியை நோக்கி பொலிஸ் ரோந்து பிரிவினர் அனுப்பப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஏழாம்வகுப்பு மாணவனே இந்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டான் தனது தந்தையின் துப்பாக்கியை பயன்படுத்தி பல முறை துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.