விஞ்ஞானிகளை அதிர்ச்சியில் ஆழ்த்திய வெப்பநிலை மாற்றங்கள்!
நெப்டியூனின் (Neptune) 'எதிர்பாராத' வெப்பநிலை மாற்றங்கள் விஞ்ஞானிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நமது சூரிய் குடும்பத்தில் புளூட்டோ (Pluto) குறுங்கோள் என அறிவிக்கப்பட்டதை அடுத்து தற்போது கடைசி இடத்தில் இருப்பது நெப்டியூன் கிரகம் ஆகும். இது சூரியனை ஒருமுறை சுற்றிவர 165 ஆண்டுகள் எடுத்துக்கொள்கிறது.
இந்த நிலையில், லீசெஸ்டர் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் நெப்டியூன் கிரகம் குறித்து ஆய்வு நடத்தினர். அப்போது நெப்டியூனின் வெப்பநிலை மாற்றம் அடைந்துள்ளது தெரியவந்தது.
17 ஆண்டுகளில் நெப்டியூனின் வெப்பநிலை மாற்றங்களைக் கண்காணித்த ஆராய்ச்சியில், மைனஸ் 220 டிகிரி செல்சியஸுக்கு வெப்பநிலை வீழ்ச்சியடையும் குளிர் கிரகம் தென் துருவத்தில் வியத்தகு முறையில் வெப்பமடைவதைக் கண்டறிந்தனர்.
கோடை காலம் வந்தாலும், கிரகத்தின் பெரும்பகுதி உண்மையில் குளிர்ச்சியடைந்திருப்பதைக் கண்டறிந்தனர்.
ஆனால் கிரகத்தின் தென் துருவம் மீண்டும் வெப்பமடைந்ததை நிபுணர்கள் கவனித்தனர். இந்த நிகழ்வு விஞ்ஞானிகளை ஆதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.