தோல்வியை ஏற்றுக்கொண்ட ஸ்கொட்மொறிசன் ; தொழில்கட்சி தலைவருக்கு வாழ்த்து!
அவுஸ்திரேலிய தேர்தலில் தோல்வியடைந்துள்ளதை ஸ்கொட்மொறிசன் (Scott Morrison) ஏற்றுக்கொண்டுள்ளதுடன் தொழில்கட்சி தலைவர் அன்டனி அல்பெனிஸ் (Anthony Albanese) இற்கு அவர் வாழ்த்தினையும் கூறியுள்ளார்.
அவுஸ்திரேலிய தேர்தல் முடிவுகள் வெளியாகிவருகின்றது. இந்த நிலையில் ஸ்கொட்மொறிசன் (Scott Morrison) தனது கூட்டணியின் தோல்வியை ஏற்றுக்கொண்டுள்ளார்.
இந்நிலையில் தொழில்கட்சி தலைவர் அன்டனி அல்பெனிஸ் (Anthony Albanese) இற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ள அவர் இது பெரும் எழுச்சியின் காலம் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் எங்கள் தேசத்தின் காயங்கள் ஆறுவது அவசியம் எனவும் ஸ்கொட்மொறிசன் (Scott Morrison) தெரிவித்துள்ளார்.
அதேசமயம் தொழில்கட்சி தலைவர் அன்டனி அல்பெனிஸ் (Anthony Albanese) கட்சி ஆதரவாளர்கள் தமது வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.
தொடர்புடைய செய்தி
அவுஸ்திரேலியாவில் ஆட்சியமைக்கும் தொழில் கட்சி !