அமெரிக்காவில் விபத்துக்கு சில நொடிகளுக்கு முன்; பதறவைக்கும் காட்சிகள்!
அமெரிக்காவில் கார் ஒன்று விபத்தில் சிக்கிய நிலையில் அது தொடர்பில் பதறவைக்கும் காணொளி காட்சிகள் எக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ளது.
அமெரிக்கா கென்டக்கி மற்றும் இண்டியானா மாகாணங்களுக்கு இடையே போக்குவரத்துக்கான இணைப்பு பலாமாக கிளார்க் மெமோரியல் பாலம் உள்ளது. ஓஹியோ நதிக்கு குறுக்கே கட்டப்பட்டள்ள கிளார்க் பாலத்தை செகென்ட் ஸ்ட்ரீட் பாலம் என்றும் அழைக்கின்றனர்
X தளத்தில் வைரல்
. இந்த பாலத்தில் கடந்த மார்ச் 18 ஆம் தேதி டிரக் ஒன்று எதிரில் வந்த கார் மோதியதில் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் பக்கவாட்டு தடுப்பை உடைத்துக்கொண்டு ஆற்றை நோக்கி பாய்ந்து அந்தரத்தில் தொங்கியது.
இந்த விபத்து சம்பவத்தில் மீட்புக்குழு விரைந்து செயல்பட்டதால் அதிர்ஷ்டவசமாக பெண் ஓட்டுநர் உயிர்தப்பினார். இந்த விபத்து மற்றும் மீட்புப் பணி தொடர்பான காட்சிகள் அந்த சமயத்தில் வெளியாகியிருந்தது.
BREAKING: Heroic rescue made as semi-truck hangs off a bridge over the Ohio River.
— RG | Sarge (@RG_Sarge) March 1, 2024
Insane.
The truck was hanging over the Ohio River on the Clark Memorial Bridge, also known as the 2nd Street Bridge after getting into a collision.
The crash initially happened around noon… pic.twitter.com/ctUCiIqO88
இந்நிலையில் விபத்துக்குள்ளான டிரக்கில் பொருத்தப்பட்டிருந்த டாஸ் கேம் கேமராவில் விபத்துக்கு சில நொடிகளுக்கு முன் ஓட்டுநர் டிரக்கை இயக்கிய காட்சிகளும் பாலத்தின் பக்கவாட்டு தடுப்பை உடைத்துக்கொண்டு டிரக் ஆற்றை நோக்கி பாயும் காட்சிகளும் வெளியாகியுள்ளது.
இந்த வீடியோ X தளத்தில் 13 மில்லியன் பார்வைகளைத் தாண்டி வைரலாகி வருகிறது.