உக்ரைன் எல்லையில் இருந்து திரும்பும் ரக்ஷ்ய படைகள்! பதற்றம் குறையுமா?
உக்ரைன் எல்லைக்கு அருகில் குவிக்கப்பட்டிருந்த ரஷ்ய படைகளில் சில படைகள் முகாமுக்கு திரும்புவதாக ரஷ்யா பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் இணையத்தில் வெளியிட்ட வீடியோவில் அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் கூறியதாவது, நாடு முழுவதும் பெரிய அளவிலான பயிற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், உக்ரைன் எல்லைக்கு அருகே உள்ள தெற்கு மற்றும் மேற்கு இராணுவ மாவட்டங்களில் இருந்த சில படை பிரிவுகள், தங்கள் பயிற்சிகளை முடித்துக்கொண்டு முகாமிற்கு திரும்ப தொடங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதேசமயம் பாதுகாப்பு அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட வீடியோ காட்சிகள் சில இராணுவ டேங்கர்கள் மற்றும் பிற இராணுவ வாகனங்கள் ரயில்வே பிளாட்கார்களில் ஏற்றப்படுவதைக் காட்டுகிறது.
இந்த நிலையில் ரஷ்ய படைகளின் குறித்த நடவடிக்கை மூலம் ரஷ்யா மற்றும் மேற்கத்திய நாடுகளிடையே நிலவி வரும் பதற்றம் குறையும் என ஏதிர்பார்க்கப்படுகிறது.