கனடாவிலிருந்து வெளிநாட்டுக்கு கடத்தப்படவிருந்த 109 கிலோ கிராம் மீன்கள் மீட்பு
கனடாவில் சுமார் ஐந்து லட்சம் டொலர் பெறுமதியான விலாங்கு மீன் குஞ்சுகள் மீட்கப்பட்டுள்ளன.
ரொறன்ரோ பியர்சன் விமான நிலையத்தில் இந்த மீன் குஞ்சுகள் மீட்கப்பட்டுள்ளன.
வெளிநாடு ஒன்றுக்கு அனுப்பி வைக்கப்படவிருந்த மீன் வகைகளே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.
சுமார் 109 கிலோ கிராம் எடையுடைய விலாங்கு மீன் குஞ்சுகள் மீட்கப்பட்டதாக விமான நிலையப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நோவா ஸ்கோஷியாவிலிருந்து சட்டவிரோதமாக மீன்களை பிடித்து வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்ய எவரும் முயற்சிக்க வேண்டாம் என அரசாங்கம் கோரியுள்ளது.
இவ்வாறான முயற்சிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு முறியடிக்கப்படும் என அறிவித்துள்ளது.
இந்த விலாங்கு மீன்கள் சட்டவிரோதமான முறையில் ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.