சாட்களின் போது ஈமோஜிக்களை பயன்படுத்துபவரா நீங்கள்
சாட்களின் போது ஈமோஜிக்கள் (Emoji) பயன்படுத்தும் போது மிகவும் அவதானத்துடன் அவதானத்துடன் பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
கனடாவில் ஈமோஜிக்கள் மூலமாக தொடர்பாடல் சட்ட ரீதியானது என அறிவிக்கப்பட்டுள்ளது.
சாதாரணமாக ஒருவர் நாளொன்றுக்கு 85 டெக்ஸ்ட் மெசேஜ்களை அனுப்புவதாக தெரிவிக்கப்படுகிறது.
இவற்றில் அதிகளவான ஈமோஜிக்கள் பயன்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஏதேனும் ஒரு கொடுக்கல் வாங்கல் அல்லது ஏதேனும் ஒரு உடன்பாடு தொடர்பிலான சாட்களின் போது ஈமோஜிக்களை பயன்படுத்துவதன் ஊடாக சில சமயம் ஆபத்துக்கள் ஏற்படலாம் என என தெரிவிக்கப்படுகிறது.
வியாபார சட்டத்தரணி மைக்கல் வெயின்பர்கர் என்பவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
ஒரு வார்த்தையை கூட பயன்படுத்தாது ஈமோஜிக்களை பயன்படுத்தி தொடர்பாடல் முன்னெடுக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
அண்மையில் கனடாவில் விவசாயி ஒருவர் ஈமோஜி ஒன்றை பயன்படுத்தி சிக்கலில் மாட்டிக்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த விவசாயி நிறுவனம் ஒன்றுக்கு 82,000 டாலர்களை நட்டயீடாக செலுத்த நேரிட்டது என அவர் தெரிவித்துள்ளார்.
ஒருவரிடம் இருந்து அனுப்பப்படும் தகவல் ஒன்றுக்கு நீங்கள் தம்ஸ்அப் இமோஜியை பயன்படுத்தினால் அதனை நீங்கள் ஏற்றுக் கொள்வதாகவே அர்த்தப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே இந்த விடயத்தில் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.