ஹமில்டனில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பெண் பலி
ஹமில்டன் நகரின் மையப்பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த துப்பாக்கிச் சூடு மாலை 5:30 மணிக்கு கிங் வீஸ்ட் தெருவிலுள்ள ஜாக்சன் ஸ்கொயர் அருகே, மேக்நாப் மற்றும் ஜேம்ஸ் வீதிகளுக்கிடையில் நடந்ததாக ஹாமில்டன் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் இருவர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், மற்றொரு ஆண் உயிராபத்தற்ற காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காவல்துறையினர் தப்பிச் சென்ற சந்தேகநபரை தேடி வருகின்றனர். அவர் ஜேம்ஸ் வீதியை வடக்கு நோக்கி நடந்தே சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த துப்பாக்கிச் சூடு குறிவைத்து நடத்தப்பட்டது என்ற தகவல் தற்போது இல்லையென காவல்துறையின் கடமைத் தலைமை ஆய்வாளர் கிரெக் டோர் தெரிவித்துள்ளார்.
சம்பவம் பேருந்து அருகே இடம்பெற்றதாகவும், இருவரும் பேருந்திலிருந்து இறங்கியவுடன் சுடப்பட்டார்களா என்ற விசாரணை தொடர்வதாகவும் அவர் கூறினார்.