கியூபெக் மாகாண தேர்தல் முடிவுகள்... கனடா பிரதமருக்கு புதிய தலைவலி...
Separatist party wins Quebec election, adding new test to Canada's unity: கியூபெக் மாகாண தேர்தலில் பிரிவினைவாதக் கட்சி ஒன்று வெற்றி பெற்றுள்ளதால், கனடாவின் ஒற்றுமைக்கு சோதனை ஏற்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.
கியூபெக் மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்து முடிந்த தேர்தலில் பிரிவினைவாதக் கட்சி ஒன்று வெற்றி பெற்றுள்ளதால், கனடா பிரதமர் மார்க் கார்னிக்கு புதிய தலைவலி ஒன்று உருவாகியுள்ளது.

கியூபெக் மாகாண தேர்தலில் Parti Québécois (PQ) என்னும் கட்சி வெற்றி பெற்றுள்ளதாக கனேடிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த PQ கட்சி, ஒரு பிரிவினைவாதக் கட்சியாகும். அதாவது, கியூபெக்குக்கு கனடாவிலிருந்து சுதந்திரம் வேண்டும் என குரல் கொடுத்துவரும் கட்சி இந்தக் கட்சி.
PQ கட்சியின் வேட்பாளர், Paul St-Pierre Plamondon என்பவர். இவர் PSPP என அழைக்கப்படுகிறார்.
இதற்கிடையில், ஏற்கனவே ஆல்பர்ட்டா மாகாணம் கனடாவிடமிருந்து பிரிந்து தனிநாடாவது தொடர்பில் வாக்கெடுப்புகளை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் நிலையில், அதே கொள்கைகளைக் கொண்ட PQ கட்சி கியூபெக்கில் வெற்றி பெற்றுள்ளதால் அது கனடாவின் ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கலாம் என கருதப்படுகிறது.
ஆல்பர்ட்டா மாகாணம் கனடாவிலிருந்து பிரிவது தொடர்பான விடயங்கள் ஏற்கனவே கனடா பிரதமருக்கு தலைவலியை உருவாக்கியுள்ள நிலையில், PQ கட்சியின் வெற்றியால் கார்னிக்கு புதிய தலைவலி ஏற்பட உள்ளது!