அமெரிக்க தலைநகரில் தொடர் வெடிகுண்டு மிரட்டல்! அச்சத்தில் மக்கள்
அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டனில் நேற்று முன்தினம் ஒரே நாளில் தொடர்ந்து வந்த வெடிகுண்டு மிரட்டல்களால் மக்கள் பெரும் அச்சத்திற்கு உள்ளாகியினர்.
வொஷிங்டனில் டி.சி.பி.எஸ். மற்றும் டி.சி. சார்ட்டர் பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தன. அதன் தகவல் அறிந்ததும் வொஷிங்டன் பெருநகர பொலிஸ் படையினர் அந்த பாடசாலைகளுக்கு விரைந்தனர்.
அந்தப் பள்ளிகளில் இருந்து மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இதன்படி அங்கு அங்குலம் அங்குலமாக தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.
ஆனாலும் வெடிகுண்டோ, பிற வெடிபொருட்களோ சிக்கவில்லை. டன்பார் பாடசாலைக்கு கடந்த செவ்வாய்க்கிழமை ஏற்கனவே வெடிகுண்டு மிரட்டல் வந்தது என தகவல் வெளியாகி இருந்தன. அதே நேரத்தில் அங்கு நடைபெறவிருந்த ஒரு நிகழ்ச்சிக்கு துணை ஜனாதிபதி கமலா ஹாரிசின் கணவர் டக் எம்ஹாப் வந்திருந்தார்.
வெடிகுண்டு மிரட்டலால் அவரும் அங்கிருந்தவர்களும் பாதுகாப்பாக வெளியே அழைத்துச் செல்லப்பட்டார். தொடர்ந்து மிரட்டல் வந்ததால் அங்கிருந்தவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
இந்த வெடிகுண்டு மிரட்டல்கள் குறித்து வாஷிங்டன் மாநகர பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றார்கள்.இந்நிலையில் வெடிகுண்டு மிரட்டல்கள் தொடர்பாக ஆறு இளைஞர்களை எஃப்.பி.ஐ (FBI) அடையாளம் கண்டுள்ளது.