நடுங்கவைத்த சாலை விபத்து... உடல் நசுங்கிய நிலையில் பல மீட்பு
ஹாமில்டன் பிரதான சாலையில் ஏற்பட்ட கோர விபத்தில் சிக்கி 6 பேர் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், இருவர் கவலைக்கிடம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஹாமில்டன் பிரதான சாலை 6ல் வெள்ளிக்கிழமை பிற்பகல் இந்த கோர சம்பவம் நடந்துள்ளது. தகவல் அறிந்து சம்பவப்பகுதிக்கு விரைந்த அவசர மருத்துவ உதவிக்குழுவினர், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மொத்தம் 5 வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதாக ஒன்ராறியோ பிராந்திய பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹாமில்டன் மருத்துவ உதவிக்குழுவினரின் தகவலின்படி, 30 வயது கடந்த இருவர் உடல் நசுங்கி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
மேலும், 32 வயதான பெண்மணி ஒருவரும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு உயிராபத்து இல்லை எனவும் கூறப்படுகிறது.
மேலும், 64 வயது நபரும் 24 வயது பெண் ஆகிய இருவரும் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் சிக்கிய 6வது நபர் லேசான காயங்களுடன் தப்பியதாக தெரிய வந்துள்ளது.
விபத்துக்கான காரணம் தொடர்பில் விசாரித்து வருவதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
சம்பவத்தை நேரில் பார்த்த மக்கள், இந்த விவகாரம் தொடர்பில் பொலிசாருக்கு உதவ வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.