அமெரிக்காவில் காணாமல்போன சிறுமிகளை தேடிய பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி; வீடொன்றில் ஏழு சடலங்கள் மீட்பு
அமெரிக்காவில் காணாமல்போன பதின்மவயதினரை தேடிச்சென்ற பொலிஸார் காணியொன்றிற்குள் 7 சடலங்களை கண்டுபிடித்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சடலமாக மீட்கப்பட்டவர்களில் தாங்கள் தேடிவந்த இவி வெப்ஸ்டர் 14 பிரிட்டனி பிரூவர் ஆகியோரின் உடல்களும் இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட சடலங்களுள் பதின்ம வயது சிறுமிகளுடன் பயணித்த பாலியல் குற்றவாளி ஜெசே மக்படனின் சடலத்தையும் மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிறுமிகளை தேடிச்சென்ற பொலிஸார்
எனினும் அவர்களின் மரணத்திற்கான காரணம் என்னவென பொலிஸார் தெரிவிக்கவில்லை. ஏனைய நான்கு உடல்கள் குறித்து அதிகாரிகள் தகவல்கள் எவற்றையும் வெளியிடவில்லை.
கடந்த திங்கட்கிழமை பதின்மவயது சிறுமிகள் இருவரும் காணாமல்போயுள்ளதாக ஒக்லஹோமாவின் பொலிஸார் அறிவித்திருந்தனர். இருவரும் பாலியல் குற்றவாளி மக்டொவனுடன் காணப்பட்டனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிறுவர் பாலியல் குற்றச்சாட்டு தொடர்பில் மக்டொவன் நீதிமன்றத்தில் ஆஜராகததை தொடர்ந்து பொலிஸார் அவரது வீட்டை சோதனையிட்டனர்.
இதனை தொடர்ந்து சுமார் 6000 பேர் வசிக்கும் ஹென்டியெட்டா நகரில் உள்ள வீடொன்றை பொலிஸார் சோதனையிட்டபோதே ஏழு உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் காணாமல்போன இருவரினதும் உடல்களை மீட்டுள்ளதாக கருதுவதாக தெரிவித்துள்ள காவல்துறையினர் மரபணுபரிசோதனைகளிற்காக காத்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.