கனடாவின் இந்தப் பகுதியில் கடும் மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை
கனடாவின் மொன்றியால் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் கடுமையான மின்னல் தாக்கம், இடிமுழக்கம் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த மூன்று நாட்களாக குறித்த பகுதியில் கடுமையான வெப்பநிலை நீடித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
எவ்வாறு எனினும் இன்றைய தினம் கடும் மழையுடன் இடி மின்னல் தாக்கமும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கனடிய சுற்றாடல் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான அமைப்பு மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மொன்றியால், லாவல்,வாடுரில்,வெலிபீல்ட் மற்றும் தென்கியூபெக் பகுதிகளிலும் இடி மின்னல் தாக்கம் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த இடி மின்னல் தாக்கங்களின் போது பலத்த காற்று வீசும் எனவும் ஆலங்கட்டி மழை பெய்யக்கூடிய வாய்ப்பு உண்டு எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சில இடங்களில் திடீரென வெல்லம் ஏற்படக்கூடும் எனவும் எச்சரிக்கையை விடுக்கப்பட்டுள்ளது.