கனடாவில் மோசமான நபர் ஒருவரால் இளம்பெண்ணுக்கும் குழந்தைக்கும் நேர்ந்த கதி: நீதி கேட்கும் தந்தை

Balamanuvelan
Report this article
ஆல்பர்ட்டாவிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றுக்கு சமீபத்தில்தான் குடிபோன அந்த குடும்பத்துக்கு, அது தங்கள் குடியைக் கெடுக்கப்போகும் இடம் என்பது தெரிந்திருக்கவில்லை.
Cody McConnell, அவரது மனைவி Mchale Busch (24) அவர்களது 16 மாதக் குழந்தையான Noah McConnell ஆகியோர் Hinton என்ற இடத்திலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் குடியேறினார்கள்.
இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை, Mchaleம் குழந்தை Noahவும் திடீரென காணாமல் போனார்கள்
பின்னர், வெள்ளியன்று, இருவரது உயிரற்ற உடல்களும் கண்டுபிடிக்கப்பட்டன. அவர்கள் இருவரும் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருந்தார்கள். குற்றவாளி அவர்கள் வாழ்ந்த அதே அடுக்கு மாடிக்குடியிருப்பில் வாழ்ந்துவந்த Robert Keith Major (53) என்பவன்.
இந்த Robert பாலியல் குற்றவாளிகள் பட்டியலில் பதிவுசெய்யப்பட்ட ஒரு நபர்.
ஆனால், தாங்கள் ஒரு பாலியல் குற்றவாளி வாழும் அதே அடுக்கு மாடிக்குடியிருப்பில் வாழ்கிறோம் என்பது Cody குடும்பத்தினருக்கு தெரியாது.
ஆக, அது தெரியாததால் தன் காதல் மனைவியையும் அன்புக் குழந்தையையும் பறிகொடுத்திருக்கிறார் Cody.
மனைவியையும் பிள்ளையையும் காணவில்லை என Cody பொலிசாரிடம் புகாரளிப்பதற்கு முன்பே அவர்களை Robert கொலை செய்துவிட்டிருக்கிறான் என்பது இப்போதுதான் தெரியவந்துள்ளது.
வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்ட அவன் மீது இரண்டு கொலைக்குற்றச்சாட்டுகள் மற்றும் உடல்களை அவமதித்த குற்றச்சாட்டு ஆகியவை பதிவு செய்யப்பட்டுள்ளன.
Robert பாலியல் குற்றவாளிகள் பட்டியலில் இருப்பது பொலிசாருக்குத் தெரியும். ஆனால், பொதுமக்களுக்குத் தெரியாது. அப்படித் தெரிந்திருந்தால், என் மனைவியையும் குழந்தையையும் காப்பாற்றியிருப்பேன் என்று கூறும் Cody, தாங்கள் குடிபுகும் வீடுகளில் பாலியல் குற்றவாளிகள் உள்ளார்கள் என்பது தெரியும் வகையில் சட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்படவேண்டும் என்கிறார்.