அமெரிக்காவில் 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை; நாடு கடத்தப்படும் இந்தியர்?
அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில், 13 வயதுக்குட்பட்ட சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ள இந்தியர் நாடௌகடத்தப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
நியூஜெர்சி மாகாணத்தில், வசித்து வந்த இந்தியரான வோடெலா யஷஸ்வி கொத்தப்பள்ளி என்பவரே குறித்த குற்றசாட்டை எதிர்கொள்ளுகின்றார்.

டிரம்ப் பதவியேற்றது முதல் 3,800 இந்தியர்கள் நாடுகடத்தல்
குறித்த இந்தியர் முறையான ஆவணங்களின்றி அமெரிக்காவில் தங்கியிருந்தவர் என அந்நாட்டின் குடியேற்ற மற்றும் சுங்க அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
பாலியல் குற்றம் தவிர, கடைகளில் திருடியது மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தது போன்ற வழக்குகளும் அவர் மீது உள்ளன.
அமெரிக்க சட்டப்படி, சிறார்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடும் வெளிநாட்டினர் முன்னுரிமை அடிப்படையில் தடுத்து வைக்கப்பட்டு, நாடுகடத்தப்படுவார்கள்.
அதேவேளை டிரம்ப் ஜனாதிபதியாக பதவியேற்றது முதல், சமீபகாலமாக அமெரிக்காவிலிருந்து இந்தியர்கள் நாடுகடத்தப்படுவது அதிகரித்துள்ளது.
அந்தவகையில் 2025-ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 3,800-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் அமெரிக்காவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக இந்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது
. இந்நிலையில் பாலியல் குற்றச்சாட்டில் கைதாகியுள்ள யஷஸ்வி மீதான குற்றச்சாட்டுகள் நீதிமன்ற விசாரணையில் உள்ளன. விசாரணை முடிவடைந்ததும் அவர் இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது.