இந்தியாவுக்கே திரும்பிவந்துவிடலாம் என்றிருக்கிறேன் என்று கூறிய கனடாவாழ் இந்தியருக்கு பிரபல நடிகரின் ஆலோசனை
இனியும் கனடாவில் வாழ விருப்பமில்லை, இந்தியாவுக்கே வந்துவிடலாம் என்று நினைக்கிறேன் என்று கூறிய கனடாவாழ் இந்தியர் ஒருவருக்கு பிரபல இந்திய நடிகர் ஷாருக்கான் கூறிய ஆலோசனை குறித்த செய்தி ஒன்று பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
பிரபல நடிகர் ஷாருக்கான் நடித்துள்ள Dunki என்னும் திரைப்படம், இம்மாத இறுதிவாக்கில் திரைக்கு வர உள்ளது. அது தொடர்பான தனது ரசிகர்களின் கேள்விகளுக்கு எக்ஸில் சர்ப்ரைஸாக பதிலளித்தார் ஷாருக்கான்.
Dunki, புலம்பெயர்ந்தோர் வெளிநாடுகளில் சந்திக்கும் சவால்கள் தொடர்பான ஒரு திரைப்படம் ஆகும். சமீபத்தில் அப்படத்தின் பாடல் ஒன்று வெளியானது. அந்த பாடலை பார்த்த இந்திய ரசிகர்கள் பலர் இந்தியாவை மிஸ்பண்ணுவதாக தெரிவித்துள்ளார்கள்.
பாடலைப் பார்த்த ரசிகர் ஒருவர், எட்டு ஆண்டுகளாக கனடாவில் வாழ்கிறேன். அந்த பாடல் காட்சியைப் பார்த்த பிறகு, இனியும் கனடாவில் வாழ எனக்கு விருப்பமில்லை, நான் இந்தியாவுக்கே வந்துவிடுகிறேன் என்று கூறியுள்ளார்.
Arre yaar….i also feel India is the best but take all decisions carefully. Sometimes we have to do work outside and make a life for ourselves. #Dunki https://t.co/2LAwXKUKuo
— Shah Rukh Khan (@iamsrk) December 2, 2023
அவருக்கு எக்ஸில் பதிலளித்துள்ள ஷாருக்கான், நண்பரே, நானும் இந்தியாதான் சிறந்தது என்றுதான் உணர்கிறேன். ஆனாலும், சில நேரங்களில் வெளிநாடுகளுக்குச் சென்று நமக்காக கொஞ்சம் வாழத்தான் வேண்டும் என்று கூறியுள்ளார்.
அதைப் பார்த்த வேறு சிலரும், உண்மைதான், தேசப்பற்று வேறு, கொஞ்சம் நமக்கென்று சிறந்த வாழ்க்கையை வாழ்வது வேறு, சில நேரங்களில், தேவைக்கேற்றாற்போல் முடிவுகளை எடுத்துக்கொள்ளவேண்டும் என்பது போன்ற கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.