சிட்னி கடற்கரையிலிருந்து உடனடியாக வெளியேற்றப்பட்ட மக்கள்!
அவுஸ்திரேலியாவின் சிட்னியின் வடக்கில் உள்ள கடற்கரையில் சுறா ஒன்று டொல்பினை தாக்கிகொன்றதை தொடர்ந்து கடற்கரையிலிருந்த மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
சிட்னியின் வடபகுதி கடற்கரையில் நிகழ்வு ஒன்று இடம்பெற்றுக்கொண்டிருந்தவேளை மிகவும் ஆபத்தான புல் சுறா டொல்பினை கொன்றுள்ளது என தகவல்கள் வெளியாகின.
வாலில் காயங்களுடன் காணப்பட்ட டொல்பின் கரைக்கு வந்த பின்னர் உயிரிழந்தது. இதனையடுத்து உடனடியாக கடலில் நீச்சலில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்கள் வெளியேற்றப்பட்டதுடன் அங்கு இடம்பெற்றுக்கொண்டிருந்த நிகழ்வும் நிறுத்தப்பட்டது.
பகுதிகளிற்கு இடையில் நீச்சலில் ஈடுபடுவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன் சுறாக்கள் நடமாட்டத்தை அதிகாரிகள் அவதானித்து வருகின்றனர்.
கடலில்நீச்சலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஒருவர் சுறாவை பார்த்ததாகவும், சுறா அவரை தாண்டி டொல்பினை நோக்கி சென்றது என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் உயிரிழந்த டொல்பினின் பல பகுதிகளில் கடிக்கப்பட்ட காயங்கள் காணப்படுகி;ன்றன என தகவல்கள் வெளியாகியுள்ளன.