கனடாவில் 80 ஆண்டுகளுக்கு பின் இடம்பெற்ற நெகிழ்ச்சி சம்பவம்
கனடாவில் 80 ஆண்டுகளின் பின்னர் ஓர் நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
1944 ஆம் ஆண்டில் படை வீரர் ஒருவர் 3 வயது சிறுமியை ஆபத்திலிருந்து மீட்டுள்ளார்.
இரண்டாம் உலகப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் குறித்த சிறுமியை கனடிய படை வீரர் ஒருவர் ஆபத்திலிருந்து மீட்டிருந்தார்.
98 வயதான டாக்டர் ராலி ஆமிடேஜ் என்ற படைவீரர், தான் மீட்ட சிறுமையை 80 ஆண்டுகளின் பின்னர் சந்தித்துள்ளார்.
சொன்ஜா ஜாப்ஸ் என்ற அப்போதைய சிறுமி வயது முதிர்ந்த பெண்ணாக தற்பொழுது குறித்த படை வீரரை சந்தித்துள்ளார்.
மிக நீண்ட ஆண்டுகளின் பின்னர் தன் மீது உயிரை மீட்ட நபரை சந்திக்க கிட்டியமை மகிழ்ச்சி அளிப்பதாக ஜாப்ஸ் தெரிவித்துள்ளார்.
பள்ளம் ஒன்றில் சிக்கி இருந்த இந்தச் சிறுமியை குறித்த படை வீரர் காப்பாற்றி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விடயம் தொடர்பில் ஊடகங்களில் தகவல் வெளியிடப்பட்டதனை தொடர்ந்து குறித்த இருவரும் சந்தித்துக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.