அம்மாடியோவ்.. வானம் கிட்ட!! பெரிய ராட்டினத்தின் உச்சியில் கூலாக காஃபி குடிக்கும் இளவரசர்
துபாயின் பட்டத்து இளவரசரான ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் ராட்சத ராட்டினத்தின் உச்சியில் அமர்ந்து கொண்டு தேநீர் அருந்தும் காட்சிகள் இணையத்தையே அதிரவைத்துள்ளன.
சாகசங்களை விரும்பும் இளவரசர் ஷேக் ஹம்தான் சமீபத்தில் வெளியிட்டுள்ள புதிய வீடியோ ரசிகர்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அதாவது, உலகின் மிகப்பெரிய ராட்டினமான துபாய் ஐன்-ன் உச்சியில் கூலாக காஃபி குடிக்கிறார்.
இங்கிலாந்தில் உள்ள லண்டன் ராட்டினத்தை விட இது பெரியதாகும், ஒரு தடவை மட்டுமே முழுமையாக சுற்றிவர 38 நிமிடங்கள் ஆகும்.
குளிர்சாதன வசதியுடன் 48 கேபின்கள் இணைக்கப்பட்டுள்ள இந்த ராட்டினத்தில் சுமார் 1750 பயணிகள் பயணிக்கலாம்.
ஐக்கிய அரபு எமீரகத்தின் 50வது தேசிய தினத்தன்று திறக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.