குவைத் மன்னர் ஷேக் நவாப் அல்-அஹ்மத் உடல்நலக்குறைவால் காலமானார்
Death
World
Kuwait
By Kirushanthi
குவைத் நாட்டின் மன்னர் ஷேக் நவாப் அல்-அஹ்மத் அல்-சபா, தனது 86வது வயதில் காலமானார்.
இந்த தகவலை அறிக்கை ஒன்றின் மூலம் குவைத் அரசு தெரிவித்துள்ளது.
அதில், குவைத் அரசின் மன்னர் ஷேக் நவாப் அல்-அஹ்மத் அல்-சபாவின் மறைவுக்கு மிகுந்த சோகத்துடனும், துக்கத்துடனும் இரங்கல் தெரிவித்துக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளது.
தனது சகோதரர் மறைவுக்கு பின் 2020-ல் மன்னராக பொறுப்பேற்ற அவர், மூன்றாண்டுகள் ஆட்சியில் இருந்துள்ளார்.
கடந்த மாதம் உடல்நலப் பிரச்சினை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து அவரது உடல் நலம் முன்னேறியுள்ளதாக கூறப்பட்டது.
இந்நிலையில், அவர் இன்று காலமானார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US