கடலுக்கு அடியில் கண்டு பிடிக்கப்பட்ட கப்பல்; கின்னஸ் சாதனை
இரண்டாம் உலகப் போரின் போது மூழ்கடிக்கப்பட்ட அமெரிக்க கடற்படையின் கப்பல் பிலிப்பைன்ஸில் கடல் மட்டத்திலிருந்து கிட்டத்தட்ட 7000 மீட்டர் (23 000 அடி) கீழே கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
பிலிப்பைன்ஸின் மூன்றாவது பெரிய தீவான சமர் தீவில் கடலின் மேற் புறத்திலிருந்து 6865 மீட்டர் (21,521 அடி) இந்த கப்பல் கடந்த மாதம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து ஒக்டோபர் 25, 1944 அன்று மத்திய சமர் தீவில் நடந்த போரின் போது அமெரிக்க கடற்படையின் கப்பல் சேதமடைந்தது.
அத்தோடு இந்த கப்பல் மூழ்கிய இடம் குறித்து கிடைத்த ஆதாரங்களை அடிப்படையாக வைத்து நீர் மூழ்கி கப்பலை கொண்டு தேடிய பொழுது இந்த கப்பலின் பாகங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

இந் நிலையில் உலகில் நடை பெற்ற மிக ஆழமான கப்பல் விபத்து என்ற கின்னஸ் உலக சாதனையை இந்த விபத்து முறியடித்துள்ளதாக கின்னஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது.
அமெரிக்க கடற்படை பதிவுகளின்படி "ஜான் சி பட்லர்- யு.எஸ்.எஸ் சாமுவேல் பி ராபர்ட்ஸ்" என்பதே இரண்டாம் உலகப் போரின் போது விபத்துக்குள்ளான கப்பலின் பெயராகும்.

இதற்கு முன்னர் கிட்டத்தட்ட 6,500 மீட்டர் கடல் ஆழத்தில், 2021இல் கண்டுபிடிக்கப்பட்ட யுஎஸ்எஸ் ஜான்ஸ்டன் என்ற கப்பல் விபத்து தான் உலகின் மிக ஆழமான கப்பல் விபத்து என அடையாளம் காணப்பட்டது.
அந்த கப்பலில், இரண்டாம் உலக்ப்போரின் போது பயன்படுத்த கொண்டு செல்லப்பட்ட வெடிமருந்துகள் இன்னும் வெடிக்கும் நிலையில் இருப்பதும் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.          
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        