ஒன்லைனில் 1.2 இலட்சம் மதிப்புள்ள லெப்டாப் ஆர்டர் செய்த நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
பிரித்தானியாவில் ஒன்லைனில் 1.2 இலட்சம் மதிப்புள்ள லெப்டாப் ஒர்டர் செய்த நபருக்கு நாய் உணவு பார்சலை அனுப்பியுள்ள சம்பவம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவை சேர்ந்த நபரொருவர், தனது மகளுக்காக கடந்த நவம்பர் மாதம் 29-ம் திகதி 1.2 இலட்சம் ரூபா மதிப்புள்ள லேப்டாப் ஒன்றை பிரபல ஒன்லைன் ஷொப்பிங் நிறுவனமான அமேசான் நிறுவனத்தில் ஓர்டர் செய்துள்ளார்.
அடுத்த நாள் அந்த பார்சல் டெலிவரி செய்யப்பட்டது. ஓர்டரை திறந்து பார்த்த போது அந்த பார்சலில் இரண்டு பார்சல் நாய் உணவு இருந்துள்ளது.
இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த நபர் ஆர்டர் மாறி வந்திருக்கலாம் என எண்ணி அமேசான் நிறுவனத்திற்கு தொடர்பு கொண்டுள்ளார்.
இது தங்களுடைய ஒர்டர் இல்லை எனக்கு என்னுடைய பணம் வேண்டும் என கூறியிருக்கிறார்.
முதலில் அவருக்கு பணத்தை திருப்பி தர மறுத்துள்ளார். பல போராட்டங்களுக்கு பிறகு தனது தவறை ஒப்புக்கொண்டு பணத்தை திருப்பித் தர உறுதியளித்தனர்.
குறித்த நபர் அழைக்கும் போது ஒவ்வொரு முறையும் பல்வேறு துறைகளுக்கு தொலைப்பேசி மாற்றப்பட்டுள்ளது. 'ஆனால் ஒவ்வொரு உரையாடலும் ஒரே மாதிரியாக முடிந்தது.
நான் அவர்களிடம் 15 மணி நேரத்திற்கும் மேலாக தொலைபேசியில் செலவழித்தேன், மேலாளர்களுடன் பேசினேன், மேலும் வெவ்வேறு துறைகளுக்கு மீண்டும் மீண்டும் மாற்றப்பட்டேன்,' என்று அவர் மேலும் கூறியுள்ளார்.